Saturday 11 May 2013

ஷெர்லாக் ஹோம்ஸ் - A Study in Pink



ஷெர்லாக் ஹோம்ஸ் நாவல்கள் படித்திருக்கிறீர்களா? அந்த நாவல்களைப் படிக்கும்போது ஏற்படும் அதே பரபரப்பு, BBC தயாரித்து, BBC One மற்றும் BBC HDல் வெளியான "எ ஸ்டடி இன் பிங்க்" (A Study in Pink) ஷெர்லாக் ஹோம்ஸ் -ஐ பார்க்கும் போதும் ஏற்படுகிறது.

இது பிபிசி தயாரிக்கும் "ஷெர்லாக்" என்ற தொடர் நாடகத்தின் முதல் பகுதியாகும். இந்த எபிசோடை ஸ்டீபன் மொபாட் என்பவர் எழுதியிருக்கிறார். பவுல் மெக்கியுகன் என்பவர் இயக்கியிருக்கிறார்.

இந்த நாடகம்வ சர் ஆர்தர் கோனன் டாயல் (Sir Arthur Conan Doyleஎழுதிய "எ ஸ்டடி இன் ஸ்கார்லெட்" (A Study in Scarlet)  என்ற நாவலைத் தழுவி, தற்காலச் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டது.

இனி கதை…

ஷெர்லாக் ஹோம்ஸ் (பெனடிக்ட் கம்பர்பேட்ச்) ஒரு அதிமேதாவி துப்பறியும் நிபுணர். ஒருவரைப் பார்க்கும்பொழுதே, அவரது வரலாற்றையே படிக்கும் திறன் கொண்டவர்.

Friday 22 March 2013

பரதேசி - வாழவிடுங்க நியாயமாரே!



"நரகக் குழியில வந்து விழுந்துட்டியே அங்கம்மா" என்ற வசனத்துடன் முடியும் இந்தப்படம் அனைவரின் இதயத்தையும் கனக்கச் செய்யும். தீராத வலியுடனேயே திரையரங்கத்தை விட்டு அகலச்செய்யும். ஒவ்வொரு முறை டீயை உறிஞ்சும் போதும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ரத்தத்தைக் உறுஞ்சுறோம் என்ற நினைவை ஏற்படுத்தும். ஒரு அவலச்சுவை திரைப்படம் இப்படி இரண்டரை மணிநேரம் ஒரு மனிதனைக் கட்டிப்போட்டு வைக்க முடியும் என்றால், அதுதான் பாலாவின் சாதனை.

Sunday 10 February 2013

விஸ்வரூபம் - புடிச்சிருக்கு! ஆனா புடிக்கல!


நிருபமா (பூஜா குமார்) கணவனைப் பற்றி மருத்துவரிடம் விளக்கும்போது “நான் கெட்டவ இல்ல டாக்டர்” “அவர் மேலயும் தப்பில்லன்னா எனக்கு ரொம்ப கில்டியா இருக்கும்” “இதோ பாருங்க அப்படியே பியூச்சர்ல எனக்கு தீபக் கூட செக்ஸ் குறிச்சு ஒரு ஐடியா இருந்தா என்ன தப்புங்கிறேள். அமெரிக்காவுல மழை பெய்யாது அவ்வுளவுதானே. போய்ட்டுபோறது.” என்று ஒரு இயல்பான அமெரிக்கப் பெண்ணையும், அதேவேளையில் கமல் விரும்பும் முற்போக்கான இந்தியப் பெண்ணையும் பிரதிபலிக்கிறார்.

தனது கணவனின் அலித்தன்மையை விளக்க “அவர் எப்படிப்பட்டவர்"னு நினைக்கும்போது, பின்னணியில் கமலின் தக தக திக தின தின தின என்ற கமலின் குரலுக்கேற்ப முகபாவனைகளைக் காட்டுவதில் அசத்தியிருக்கிறார் பூஜா குமார்.

Thursday 7 February 2013

கடல் - ஆர்ப்பரிக்குமா?

kadal-0601 நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைப் படம் முழுவதும் கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

விமர்சகர்கள் பெரும்பாலும் படம் சரியில்லை என்றே விமர்சனம் செய்திருந்தார்கள். இருந்தாலும் பார்ப்போம், ஜெயமோகன் எழுதியிருக்கிறாரே  என்று படத்தைப் பார்த்தேன். ஒரு பதிவு இதுகுறித்து எழுத வேண்டும் என்று தோன்றியது.

கௌதம் கார்த்திக்குக்கும், துளசி நாயருக்கும் அறிமுகப் படம் இது. இரு பெரும் நட்சத்திரங்களின் வாரிசுகள் ஒரு பெரிய இயக்குனரின் படத்தில் அறிமுகமாகியுள்ளனர்.

கிறிஸ்தவ வேத கல்லூரியில் படிக்கும் பெர்க்மென்ஸ் (அர்ஜூன்) மிகவும் கெட்டிக்காரர். ஒரு பாதிரியார் இவரைப் பார்த்து "ஏலே, பெர்க்மென்சு, என்னைவிட, உனக்குத்தாம்லே பைபிள் அதிகம் தெரியும்." என்று சொல்லுமளவுக்குக் கெட்டிக்காரார்.

Tuesday 29 January 2013

விஸ்வரூபம் - கமல் - இஸ்லாம்


இதுவரை கமல் செய்யும் புரட்சிகளை நாம் விமர்சன எண்ணத்துடனேயே பார்த்திருக்கிறோம் (டிடிஎச் உட்பட). இதே வலைப்பூவில் இரண்டு மூன்று பதிவுகள் கூட அவரை விமர்சித்தே இருக்கும். ஆனால் இப்போது அவருக்கு நேரும் கொடுமையைப் பார்த்தால் மனம் இளகத்தான் செய்கிறது.

அவரை இஸ்லாமியார்கள் நண்பராகவே நாம் இதுவரைக் கண்டிருக்கிறோம். மருதநாயகம் டிரெய்லரைப் பார்த்தால் எந்த ஒரு இஸ்லாமியாரும் அவரை ஆரக்கட்டித் தழுவிக் கொள்வார்கள். அந்த டிரெய்லர் வந்த போது, என்னைப் போன்றோர் அச்சத்துடனேயே பார்த்தோம். அவர் மேல் அப்போதும் சிலருக்கு விமர்சனம் இருந்தது. மர்மயோகியும் அதுபோலத்தான் என்றார்கள்.