Wednesday 19 September 2012

கமலா? சிவாஜியா? சிறந்தவர் யார்?



வலைப்பூக்களை வரிசையாகப் பார்த்துக் கொண்டு வரும்போது ஒரு பதிவரின் பதிவு சற்று யோசிக்க வைத்தது. அந்தப்பதிவிற்கான மறுமொழியை அந்த வலைப்பூவிலும் கொடுத்திருக்கிறேன். அந்த மறுமொழியையே இங்கு பதிவாகவும் கொடுக்கிறேன். நான் மறுமொழி கொடுத்திருக்கும் அந்தப் பதிவின் முகவரி இதோ...

அடுத்த கமல் யார்?


இனி என் மறுமொழி
சார் என்ன சார் இது? இதுலாம் ஓவரா தெரியலையா உங்களுக்கு. கமலால் சமூகச் சீர்திருத்தவாதியாக நடிக்க முடியும். சமுதாய கோபத்தை பதிவு செய்ய முடியும். புதிய டெக்னிக்குகளை தமிழ் சினிமாவிற்குள் கொண்டு வர முடியும். நல்ல கதைகளைச் சொல்ல முடியும். நல்ல படத்தை இயக்க முடியும். அவ்வளவுதான். அதுக்காக சிவாஜிக்கிட்டலாம் கம்பேர் பன்றீங்களே!

சிவாஜியப் போல அன்புள்ள ஒரு அப்பாவா நடிக்க சொல்லுங்க பாப்போம். நல்ல அண்ணனா நடிக்க சொல்லுங்க பார்ப்போம். கம்பீரமான போலீஸா நடிக்க சொல்லுங்க பாப்போம் (அதில நீங்க சொல்ற விக்ரம் கூட ஜெயிச்சிருக்காரு சார். கமல் போலீசா நடிக்கிறேன்னு காமடி பண்ணிருப்பார், இல்லனா மூக்கால அழுதுருப்பார் அவ்வளவுதான். கம்பீரம்லா வராது)

சிவாஜி "நீ என்ன தாண்டிட்டடா தம்பி"னு சொன்னார்னா அது அவரோட பெருந்தன்மை. அத இவரு ரொம்ப சீரியசா எடுத்துக்குட்டார்னா இவர் சிவாஜி மிஞ்சிட்டதா அர்த்தமா?

சிவாஜி எத்தனை விதமா அழுதுகாட்டியிருக்கிறார் தெரியுமா? இவருக்கு ... ... விட்டா தெரியாது. அதுவும் படத்துக்குப்படம் வேற வேற பாத்திரத்தில நடிக்கும்போதும் ஒரே மாதிரியா அந்தந்த பாத்திரங்கள் அழும். இதுதான் யதார்த்தமான நடிப்பா? ஒவ்வொரு பாத்திரத்திலும் கமல்தான் தெரிகிறாரே தவிர அந்தப் பாத்திரம் தெரிவதில்லை. ஆனால் அங்குதான் சிவாஜி வேறுபட்டிருக்கிறார். அந்தப பாத்திரங்கள்தான் நமக்குத் தெரியுமே தவிர சிவாஜி தெரியமாட்டார். சிவாஜி எத்தனை வில்லத்தனம் பண்ணியிருக்கார்தெரியுமா? இவர் காமிக்ஸ் வில்லன் ரோல்தான் (ஆளவந்தான்) பண்ணுவார். குற்றமுள்ள நெஞ்சின் முகப்பதிவுகளை இவர் சினிமாக்களில் பதிந்து காட்டியிருக்கிறாரா? சிவாஜி எத்தனைவிதமா நடந்து காட்டியிருக்கார் தெரியுமா? இவர் (கமல்) எத்தனை விதமா நடந்து காட்டியிருக்கார்?

16 வயதினிலே யாருக்கு பேரு? ரஜினிக்கா? கமலுக்கா?

மூன்று முடிச்சு யாருக்கு பேரு? ரஜினிக்கா? கமலுக்கா?

நினைத்தாலே இனிக்கும் யாருக்கு பேரு? ரஜினிக்கா? கமலுக்கா?

நினைத்தாலே இனிக்கும் படம் பார்த்திருக்கீங்களா? அந்தப் படத்தில கமலுக்குப் பேரா? ரஜினிக்கு பேரா? ரஜினிக்கு அதில சின்ன காமெடியன் ரோல்தான்.

தில்லுமுல்லு படம் பாத்துருக்கீங்களா? படம் முழுக்க ரஜினி விழுந்து விழுந்து சிரிக்க வைத்திருப்பார். கடைசி சீன்ல வந்து கமல் சிரிக்க வைக்கிறேன்ற பேருல என்ன பண்ணியிருப்பார். தைரியமா நெஞ்சுல கை வச்சு சொல்லுங்க.

காமெடில பெரிய சக்சஸ் ஆனார்னா அதுக்கு முழுக்க முழுக்க கிரேசி மோகன்தான் காரணம்.

கமல் நல்ல டெக்னிஷியன்னு சொல்லுங்க, நல்ல நிர்வாகினு சொல்லுங்க, நல்ல கதையத் தேர்ந்தெடுக்கிறவர்னு சொல்லுங்க (மும்பை எக்ஸ்பிரஸ், மன்மதன் அம்பு, உன்னைப் போல் ஒருவன் {A Wednesday பாருங்க. அதில் நசுருதீன் ஷாவின் நடிப்பைப் பாருங்க}லாம் ஒத்துக்க மாட்டோம் தலைவரே). நல்ல இயக்குனர்னு சொல்லுங்க ஒத்துக்குறோம். அதவிட்டுட்டு கமல் சிவாஜியையே மிஞ்சிட்டாரு, எம்.ஜி.ஆரயே மிஞ்சிட்டாருனு தனிமனித துதிபாடல் எதுக்குங்க?

சரி! கமல் எம்.ஜி.ஆரைத்தான் எந்த விதத்துல மிஞ்சிட்டாருன்றீங்க. எம்.ஜி.ஆருக்கு சி சென்டர்களில் இருந்த செல்வாக்கு கமலுக்கு இருக்கிறதா? எம்.ஜி.ஆரோட மாசயெல்லாம் ரஜினி சாப்பிட்டு எவ்வளவோ நாளாச்சு. கமல் சாப்பிட்டுட்டாரா? என்ன அவருக்கு மார்கெட்டிங் டெக்னாலஜி தெரிகிறது. தெனாலிலான் படமாங்க. ஆனா அத அவர் மார்கெட் பண்ண விதம்தான் ஹைலைட். இப்படித்தான் இவர் தமிழ் சினிமாவுக்கு வழிகாட்டியிருக்கிறாரே தவிர. நீங்க சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.

ரஜினிக்கு சீரியசா நடிக்க தெரியாதுன்னு நினைக்கிறீங்களா? முள்ளும் மலரும் பாருங்க, ஆறிலிருந்து அறுபதுவரை பாருங்க.
காமடி பண்ணத்தெரியாது நினைக்கிறீங்களா? அவரோடு பல படங்கள் காமடி பேஸ்தான். தம்பிக்கு எந்த ஊரு பாருங்க. தில்லு முல்லு பாருங்க. கம்பீரமா நடிக்க தெரியாதுனு சொல்றீங்களா? அலெக்ஸ் பாண்டியனை நினைச்சுப்பாருங்க. அண்ணாமலை படத்தக்கூட பாருங்க சார். காமடி மட்டும் இல்ல. எல்லா ஆக்சனும் அதிலேயே செஞ்சு காட்டியிருப்பார்.

கமலும் ரஜினியும் பிரிஞ்சு நடிச்சதுல யாருக்கு தெரியுமா லாபம்? அதுதான் கமலோட டெக்னிக். கமலும் ரஜினியும் சேர்ந்தே நடிச்சிருந்தா கமல் எப்பவோ காணாம போயிருப்பார். இரண்டு பேரும் சேர்ந்து நடிச்சதுல அதிகம் பேரு சம்பாதிச்சவரு ரஜினிதான். அத மனசுல வச்சுப் பாருங்க.

என்ன ரஜினி சிவாஜிக்கலாம், எம்ஜிஆர் மாதிரியோ அல்லது கமல் மாதிரியோ பப்ளிக்கா மக்கள் முன்னாடி நடிச்சு ஏமாத்த தெரியாது. அவ்வளவுதான்.

நடிகனுக்கு நடிப்புதான் முக்கியம். அதவிட்டுட்டு அதில கொஞ்சம், இதில கொஞ்சனா எப்படி? எதிலையும் முழுமை கிடைக்காது. விக்ரம் சூரியாலாம் எதிர்காலத்துல கமல் சாரையெல்லாம் மிஞ்சி போயிடுவாங்க. இவர தமிழ் உலகம் ஞாபகம் வச்சுக்கணும்னா அது அவரோடு டெக்னிக்ஸ்தான்.

டெக்னிக்ஸ் மற்றும் கதைத்தேர்வத் தவிர கமலால ரஜினி கிட்டையே இன்னும் வர முடியல. இவரு சிவாஜி நடிப்பையே தாண்டிருவாரா? போங்க சார் நீங்க. ரசிகனா இருக்கலாம் அதுக்காக இந்த அளவுக்கா?

கமலைப் பத்தின இன்னொரு விமர்சனத்துக்கு கீழுள்ள லிங்கை சொடுக்குங்கள்.


இந்த மறுமொழியும் என் வலைப்பூவில் பதிவாக இருக்கும். மாற்றுக்கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என் வலைப்பூவுக்கு வந்தும் மாற்றுக்கருத்தைப் பதியலாம். இது என் அன்பு அழைப்பு.

இதுதான் நான் அந்த வலைப்பூவில் கொடுத்திருந்த மறுமொழி

5 comments:

  1. இந்தப் பதிவிற்கான கமென்டுகள் சண்டியர் கரன் வலைப்பூவில் நிறைய வந்திருக்கின்றன. அனைத்தும் என் மறுமொழியைத் தாக்கியே வந்திருக்கின்றன. ஒன்றில் கூட ஆதரவைத் தேட இந்த என்னுடைய மறுமொழியால் முடியவில்லை. அதை என்னைப் படிப்பவர்களும் அறிந்து கொள்ள இந்த லிங்கை மீண்டும் தருகிறேன். http://www.sandiyarkaran.com/2012/09/NextKamal.html. என் நண்பன் ஒருவனே என்னைக் கூப்பிட்டு கண்டித்தான். இந்த அளவுக்கு கமல் பக்தர்கள் இருக்கிறார்களே! என்ன செய்ய!

    ReplyDelete
    Replies
    1. Your article is not so good.Probably you can try something else.I havent seen a single actor in india(or even hollywood) who is versatile like kamalhaasan.He is very far better than stars who simply do mere gimmicks in the silver screen.

      Delete
    2. //I havent seen a single actor in india(or even hollywood) who is versatile like kamalhaasan.//

      Is it so? Then what else can I say. No words are apt to explain my feelings.

      //you can try something else.//
      Iam also trying many other things.

      //He is very far better than stars who simply do mere gimmicks in the silver screen.//

      gimmicks has been done by everyone, including our star.

      Delete
  2. Boss what ever u said was really true.... Kamal Fans will agree this..... but his fanatics will never... because more than kamal his fans are jealous of rajni....... keep up ur good work Arul.....

    ReplyDelete

நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.

கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.

சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.