Tuesday 29 January 2013

விஸ்வரூபம் - கமல் - இஸ்லாம்


இதுவரை கமல் செய்யும் புரட்சிகளை நாம் விமர்சன எண்ணத்துடனேயே பார்த்திருக்கிறோம் (டிடிஎச் உட்பட). இதே வலைப்பூவில் இரண்டு மூன்று பதிவுகள் கூட அவரை விமர்சித்தே இருக்கும். ஆனால் இப்போது அவருக்கு நேரும் கொடுமையைப் பார்த்தால் மனம் இளகத்தான் செய்கிறது.

அவரை இஸ்லாமியார்கள் நண்பராகவே நாம் இதுவரைக் கண்டிருக்கிறோம். மருதநாயகம் டிரெய்லரைப் பார்த்தால் எந்த ஒரு இஸ்லாமியாரும் அவரை ஆரக்கட்டித் தழுவிக் கொள்வார்கள். அந்த டிரெய்லர் வந்த போது, என்னைப் போன்றோர் அச்சத்துடனேயே பார்த்தோம். அவர் மேல் அப்போதும் சிலருக்கு விமர்சனம் இருந்தது. மர்மயோகியும் அதுபோலத்தான் என்றார்கள்.


இந்தியில் வெளிவந்த "A Wednesday" திரைப்படத்தைத் தமிழில் எடுக்கப்போகிறார் என்றார்கள். கமல் எடுக்கப் போகிறார் என்றவுடன் அதில் ஏதாவது அர்த்தம் இருக்கும். பார்த்துத்தான் வைப்போமே என்று அந்தத் திரைப்படத்தைப் பார்த்து வைத்தேன். அந்தப் படம் மிகவும் அருமையாக இருந்தது. அதைத் தழுவி வந்த கமல்ஹாசனின் "உன்னைப் போல் ஒருவன்" வந்தது. வெட்னஸ்டே படத்தில் எந்த இடத்திலும் ஒரு இந்து, தீவிரவாதம் செய்வது போலவும், தீவிரவாதிகளுக்கு உதவி செய்வது போலவும் வராது. ஆனால் கமல் வலிய இந்து கதாப்பாத்திரத்தைத் திணித்து இருந்தார். இந்துக்களுக்கு எதிரான வசனங்களும் இருந்தன. இவர் தன்னையே இஸ்லாமியராக உணர்கிறாரோ என்ற எண்ணம்கூடத் தோன்றியது. அதுவரை கமலின் விசிறியாக இருந்த நான், பின்வாங்கத்துவங்கினேன்.

விஸ்வரூபம் படத்திற்கு முதற்கட்டமாக இஸ்லாமிய எதிர்ப்பு வந்தபோது, கமல் "இந்தப் படத்தை இந்துமுன்னணி ராமகோபாலன் வேண்டுமானால் எதிர்ப்பார். இஸ்லாமியச் சகோதரர்களான நீங்கள் என்னை மெச்சுவீர்கள். எனக்கு பிரியாணி விருந்து படைப்பீர்கள். நான் பசியோடு காத்திருக்கிறேன்" என்று அறிக்கை விட்டார். ராமகோபாலன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவரது நண்பர்கள் என்று கருதியவர்களே எதிர்க்கின்றனர்.

இஸ்லாமியர்களின் அனுதாபியான கமல் இஸ்லாமியர்களிடமே அகப்பட்டுக் கொண்டு விழிபிதுங்கி நிற்பதைக் கண்டதும் கரையாது கல்லும் கரைந்துவிடுவது போல நமது மனமும் கரைகின்றது.

95 கோடி பொருட்செலவில் படத்தை எடுத்து, அதை வெளியிடமுடியாமல் இருப்பது ஒரு தயாரிப்பாளருக்கு எவ்வளவு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும். இந்தப் படத்தை ஏன் வெளியிடக்கூடாது என்று இஸ்லாமிய அமைப்புகள் ஆறு காரணங்களைத் தெரிவித்திருக்கின்றன. அவற்றை தாட்ஸ் தமிழ் இணையதளத்தில் பார்த்தேன். அது கீழ்க்கண்டவாறு

இஸ்லாமியர்கள் விஸ்வரூபம் படம் தொடர்பாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் இவைதான்...

1)விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதியாக காட்டப்படும் நபர் முஸ்லீமாக காட்டப்படுகிறார். மேலும் எந்த ஒரு தீவிரவாத செயலையும் செய்யும் முன்பு அவர் நமாஸ் செய்வது போல காட்டி விட்டு பின்னர் கொலைச் செயலைக் காட்டுகின்றனர்.

2)இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை தீவிரவாதிகளின் கையேடு போல காட்டியுள்ளார் கமல்ஹாசன். அதாவது தீவிரவாத செயலில் ஈடுபடுவோர் கையில் திருக்குரான் இருப்பது போலவும், அதில் உள்ள வாசகங்களைப் படித்து விட்டு அவர்கள் தீவிரவாத செயலில் ஈடுபடுவது போலவும் காட்டுகிறார்.

3)தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் இஸ்லாமியர்கள், மனிதர்களின் கழுத்தை அறுப்பதை தத்ரூபமாக சித்தரித்துள்ளனர்.இது இஸ்லாயமிர்கள் குறித்த பொதுமக்கள் மனதில் தவறான எண்ணத்தை பதிய வைக்கும் அப்பட்டமான முயற்சியாகும்.

4)மசூதிகளையும், பள்ளிவாசல்களையும் தீவிரவாதிகளின் புகலிடம் போல காட்டியுள்ளனர். உலமாக்களை தீவிரவாத தலைவர்கள் போல காட்டியுள்ளனர். அல்லாஹு அக்பர் என்ற புனித வாசகத்தை தீவிரவாதிகளின் சங்கேத பாஷை போல காட்டியுள்ளனர்.

5)அமைதிக்குப் பெயர் போன புறாக்களையும் விடவில்லை கமல். அவற்றை அமெரிக்காவிலிருந்து யுரேனியம் கடத்தி வருவதாக காட்டியுள்ளார். மேலும் ஜிஹாத் செய்து சொர்க்கத்தை அடைவோம் என்று முஸ்லீம்கள் சொல்வது போலவும் காட்டியுள்ளார்.

6)முல்லா உமருடன் கமல் உரையாடுவது போல காட்சி வருகிறது. அதில் முல்லா உமர் தமிழில் பேசுகிறார். அதுகுறித்து கமல் கேட்கும்போது எனக்கு தமிழ் பிடிக்கும், மதுரை, கோவையில் நான் தங்கியுள்ளேன். தமிழ் ஜிஹாதிகள்தான் சிறந்தவர்கள், நம்பிக்கையானவர்கள் என்று கூறி தமிழர்களையும் மோசமானவர்களாக சித்தரித்துள்ளார்.

ன்றி தாட்ஸ் தமிழ்


முதலிரண்டு காரணங்களைப் பாருங்கள், இதற்கு பிரபலத் தமிழ் செய்தி தொலைக்காட்சிகளில் வெளியான நெஞ்சைப் பதற வைக்கும் வீடியோ காட்சிகளே போதுமான ஆதாரமாக இருக்கும். நமாஸ் செய்கிறார்களா இல்லையா என்றும், குரான் வசனங்களைச் சொல்கிறார்களா இல்லையா என்பதையும் அந்தக் காணொளிகளைக் கண்டாலே தெரியும்.

மூன்றாவது காரணம்: ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி, நீதி சொல்ல முற்படும் கதைகளில் அப்படிப்பட்ட தத்ரூபக் காட்சிகளின் அவசியம் இருக்கிறது. மிகவும் கொடூரமாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ள சென்சார் போர்டு உள்ளது. அதையும் தாண்டிதானே படம் சான்றிதழ் பெற்றிருக்கிறது. 

மேலும், இஸ்லாமியத் தீவிரவாதிகள் மட்டுமே அப்படிப்பட்டக் கொலைகளைச் செய்கின்றனர். அதாவது கேமிரா முன்னிலையில் வைத்து, இன்ன காரணத்திற்காக, இவ்வளவு பிணைத்தொகை கிடைக்காததற்காக இப்படிக் கொலைசெய்கிறோம் என்று பூசாரியின் அருகே இருக்கும் ஆடு போல அமர்ந்திருக்கும் அந்த அப்பாவி மனிதன் உணராத மொழியில் பேசி, அவன் எதிர்பாராத போதே அவனது தலையை அறுத்து, அந்தத் தலையை எடுத்து அவர்களது கோரத்தாண்டவமாடி, புனித வசனங்களை ஓலமிட்டுத் திரியும் காட்சி எத்தனையெத்தனை வந்திருக்கின்ற செய்திகளில். வேறு மதத்தினர், அல்லது இஸ்லாம் சாராத தீவிரவாதிகள் இப்படிச் செய்வதாக தகவல் இல்லையே.

நான்காவது காரணத்திற்கும் ஆதாரங்களில்லாமல் இல்லை. 

ஐந்தாவது காரணத்தைச் சொல்லி புறாவுக்கு நீதி கேட்கிறார்களா இல்லை எதற்காக கேட்கிறார்கள் என்பது புரியவில்லை. ஜிகாத் செய்து சொர்கத்தை அடைவோம் என்றே பின்லேடன் அதிகமுறை கூறியுள்ளான். இந்தியாவின் மீதும் ஜிகாத் அறிவித்தான்.

ஆறாவது காரணம் சரிதான் என்பதை நிரூபிக்கும் அளவிற்கு விஸ்வரூபத்திற்கான தடையை இஸ்லாமிய அமைப்பினர் பெற்ற வேகத்திலிருந்தே தெரிகிறது. இப்படிப்பட்டவர்களின் வலை எங்கெல்லாம் பரவியிருக்கிறது என்பதும் தெளிவாகிறது. மலேசியா தடை செய்கிறது. அரேபிய தேசங்கள் தடை செய்கின்றன. நமது ஆந்திரா, கர்நாடகம் கூட இவர்கள் மீதிருக்கும் பயத்தால் தடைசெய்கின்றன. வேறு என்ன அத்தாட்சி வேண்டும் இந்த ஆறாவது காரணத்தை நிரூபிக்க.

இப்படி இவர்கள் சொல்லும் எல்லா காரணங்களுக்கும் மலையளவு ஆதாரமிருக்க. ஏன் இப்படிக் கூப்பாடு போடுகிறார்கள்?

தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்ள இப்படிச் செய்கிறார்கள் என்று கருத வழியே இல்லை. எந்த ஒரு தனி நபரும் இந்தப் பிரச்சனையில் முன் நின்று தன்னை முன்னிறுத்திச் செயல்படவில்லை. அவர்கள் அமைப்பாகவே செயல்படுகிறார்கள். ஆக, இவர்களது பலத்தை நிரூபித்து அரசியலில் செல்வாக்குப் பெற விஸ்வரூபத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதற்கு இரையாக கமல் அகப்பட்டார்.

இந்த விவகாரத்தில் அப்பாவி இஸ்லாமியர்கள், தான் இன்னது செய்கிறோம் என்றறியாமல் இந்தப் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். யாரோ ஒரு அரேபிய, அப்கானிஸ்தானிய தீவிரவாதியைப் (தீவிரவாதத்தைப்) பற்றி படம் எடுக்கும்போது தமிழக, இந்திய இஸ்லாமியர்கள் தங்களை குறைகூறுவதாகக் கருத இந்த அமைப்புகள் பாடம் எடுக்கிறார்கள். ஏன் அப்படி நீனைக்கிறீர்கள். நீங்கள் வேறு, அவர்கள் வேறு என்றால் "நாங்கள் உலகளாவிய இஸ்லாம் சமூகம்" என்று சொல்கிறார் ஜவாஹருல்லா.

தமிழக மற்றும் இந்திய இஸ்லாமிய சகோதரர்களே, நீங்கள் இந்த தேசத்தவர்கள், ஏன் உங்களை அந்நியர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டு உங்களை கீழ்மைப்படுத்திக் கொள்கிறீர்கள். இங்கே இஸ்லாமியர்களுக்கு ஏதாவது கொடுமை நேரும்போதெல்லாம் இங்குள்ள பெரும்பகுதி இந்துக்கள் உங்களுக்கு ஆதரவாகவே இருந்திருக்கிறோம்.

Oh my God என்று ஒரு இந்திப் படம் வந்தது. அதில் வில்லனாக வரும் மிதுன் சக்ரவர்த்தி அப்படியே நித்தியானத்தாவைப் பிரதிபலித்திருப்பார். இன்னும் பல பல திரைப்படங்கள் இந்து மதத்தையும் இன்னும் பிற மதங்களையும் தாக்கித் தான் வந்து கொண்டிருக்கின்றன. எல்லா படமும் ஏதாவது ஒரு வகையில் ஏதாவதொரு தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்யும். அப்படித் தாக்கத்தை ஏற்படுத்தவே கலை பயன்படுகிறது. அது அவரவர் கருத்து சுதந்திரம். ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்.

இப்போது நடக்கும் இந்த அடக்குமுறை, கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்டிருக்கும் அறைகூவல். இந்த நவீன தீவிரவாதத்தை எதிர்கொள்ள ஒட்டுமொத்த தமிழகமும், ஏன் தமிழகம்? ஒட்டுமொத்த இந்தியாவும் கமலுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.
 
என்னதான் கமலுக்கு ஆதரவாக இருக்க விரும்பினாலும் பிளாஷ்பாக் ஒன்றுகூட கமலுக்கு ஆதரவாக இல்லை. அவர் எப்படி தன்னை மதச்சார்பற்றவராகக் காட்டிக்கொள்ள நேர்மையில்லாமல் நடந்திருக்கிறார் என்பதற்கு தமிழ்ஹிந்துவில் இன்று வெளியாகியிருக்கும் பதிவே சாட்சி. இந்துக்களுக்கு கமல் இவ்வளவு செய்தும் அவர் படங்கள் வெளிவந்திருக்கின்ற என்பதைப் இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள இது உதவும் என்ற நோக்கில் அந்தப் பதிவில் உள்ள சில குறிப்புகளைக் கீழே தருகிறேன். முழுவதையும் படிக்க இங்கேசொடுக்கவும்.

தான்கலாசார தீவிரவாதத்திற்குஉட்படுத்தப் படுவதாக புலம்பி கமலஹாசன் எழுதும் கடிதத்திலும் சரி, அவரது அடுத்தடுத்த அறிக்கைகளிலும் சரி கருத்து சுதந்திரத்திற்கு எதிராக மிரட்டல் விடுக்கும் அராஜக இஸ்லாமியர்களையும், வன்முறையாளர்களையும் கண்டித்து ஒரு வாசகம் இல்லை. மாறாக, ”நான் என்றைக்குமே இஸ்லாமியர்களின் நலனை விரும்புபவன் தான்; நான் உங்கள் சேவகன்; ரொம்ப காசு செலவழிச்சு படம் எடுத்து விட்டேன்; மன்னிச்சு கருணை காட்டுங்க கனவான்களேஎன்று ரீதியில் கூழைக் கும்பிடு போடுகிறார் இந்த சுயமரியாதைக் காகிதப் புலி.


ஹர்ஷ் தமிழ் (பேஸ்புக்கில்):

சென்னையில் உள்ள லலித் கலா அகாதமியில் 2008-ம் ஆண்டு மார்ச்சு மாதம் 3-ம் தேதி மாலையிலிருந்து 9-ம் தேதி வரை ஃபிரான்ஸு நாட்டிலிருந்து வந்து இந்தியாவில் குடியுரிமை பெற்றுள்ள மூத்த பத்திரிகையாளர் திரு ஃபிரான்ஸ்வா கோதியே அவர்களின் அமைப்பான (FACT – Foundation Against Continuing Terrorism) ஃபேக்ட்அவுரங்கசீப்அவர் இருந்த படியே” (Aurangazeb – As he was) என்கிற ஓவியக் கண்காட்சியை நடத்தியது. 4-ம் தேதியும் 5-ம் தேதியும் பிரச்சனை இல்லாமல் நடந்த கண்காட்சிக்கு ஆற்காடு நவாப் மூலம் 6-ம் தேதி பிரச்சனை ஏற்பட்டது.

ஹார்மனி-இந்தியாஎன்கிறமத நல்லிணக்கஅமைப்பை நடத்துவதாகக் கூறிக்கொள்ளும் கமல்ஹாசன் என்ற இந்த மனிதர் 6-ம் தேதி மாலை 3 மணியளவில் கண்காட்சி அரங்கிற்கு வந்து அங்கிருந்த கண்காட்சி அமைப்பாளர்களிடம் விதண்டாவாதம் செய்தார். பின்னர் எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்று கூறிச் சென்றவர்தௌஹீத் ஜமாத்”, “மனித நீதி பாசறை” “தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்போன்ற இயக்கத்தவரை அரங்கிற்கு அனுப்பி வைத்தார். பிறகு அப்போதைய திமுக அரசிடம் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி காவல்துறை மூலமும் நடவடிக்கை எடுக்கச் செய்தார்.



ஒரு பக்கம் முஸ்லிம் அமைப்பினர் கூட்டம் போட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட மறுபக்கம் அரசு மூலம் அழுத்தம் தொடர, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் படை சூழ வந்து ஓவியங்களைப் போட்டு உடைத்து கண்காட்சியை மூடிச் சென்றனர். அதோடு மட்டுமல்லாமல் ஃப்ரான்ஸ்வா கோதியே அவர்களுக்கு உதவுவதற்காக வந்திருந்த நான்கு பேரைக் கைதும் செய்தனர். அதில் மூன்று பேர் 50-வயதுப் பெண்மணிகள். பிறகு சில நல்ல உள்ளங்களின் முயற்சியால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்கள் தில்லி அருங்காட்சியக ஆவணக் காப்பகத்தில் இருக்கும் இஸ்லாமிய நூல்களின் படி வரையப் பட்ட ஓவியங்களே. இதே கண்காட்சி தில்லி, மும்பை, பெங்களூர் உட்பட இந்தியாவின் பல நகரங்களில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடத்தப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அரசும், காவல்துறையும் அத்து மீறி நடந்துகொண்டன.

சிறுபான்மையினரின் ஓட்டுகளுக்காக அவர்களின் அராஜகங்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவைகளை ஊக்குவிக்கவும் செய்வதில் திமுக அரசும் அதிமுக அரசும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல. அவுரங்கசீப் கண்காட்சியை இழுத்து மூடியது திமுக அரசு. விஸ்வரூபம் படத்தைத் தடை செய்துள்ளது அதிமுக அரசு. ஆளும் கட்சிகள் தான் வேறே தவிர அவற்றின் அணுகுமுறையிலோ, இஸ்லாமிய இயக்கங்களின் அராஜகத்திலோ எந்தவிதமான வேறுபாடும் இல்லை.


இப்போது கமலஹாசனுக்கு வரிந்து கொண்டு வரும் கருத்துச் சுதந்திரப் போராளிகள் அப்போது வாய் மூடி மௌனம் சாதித்தனர். அவர்களைப் பொறுத்த வரையில் இந்த விவகாரம் கருத்து சுதந்திரம், ஆனால் அது கருத்து சுதந்திரம் அல்ல; அது ஹிந்துத்துவ வெறியர்களின் செயல்பாடு மட்டுமே. நல்ல அறிவு ஜீவிகள், நல்ல போராளிகள்!

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ஹிந்துக்களை தூற்றவும் அவர்கள் மத உணர்வுகளைப் புண்படுத்தவும் சற்றும் தயங்காத பேர்வழி கமலஹாசன். அவருக்காக இன்று வாய்கிழிக்கும் முட்டாள் ஹிந்துக்களுக்கு இதோ ஒரு பரிசுகமலின் பரிசு:

மூன்று தின்ங்களுக்கு முன்னால் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்தபோது கமலஹாசன் சொன்னது: “விநாயகர் என்ற ஒரு கடவுளே இல்லை; ஹிந்துத்துவ வெறிக்காக விநாயகர் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அரசியலுக்காக ஏற்படுத்தப்பட்ட கடவுள் விநாயகர்


இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவிக்கும் எல்லா கலையுலக பிரமுகர்களும்கருத்து சுதந்திரம், நூறு கோடி பட்ஜெட், உலக நாயகன்என்று அதே பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் அஜித் வித்தியாசமாக தனது அறிக்கையில் பிரசினையின் ஆணிவேரைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் – ”இந்திய அரசியல் சட்டம் நமது இந்திய திருநாடு ஒரு மத சார்பற்ற ஜனநாயக நாடு என்றும் இதன் மூலமாக ஒரு இந்திய குடி மகனுக்கு சமநீதி, உரிமை மற்றும் சமத்துவம் என்று உத்தரவாதம் அளிக்கின்றது . ஆனால் இன்றைய நிலை என்ன தெரியுமா. இந்த உத்தரவாதங்கள் திரிக்கப் பட்ட வாசகங்களும், வார்த்தைகளும், புறம் பேசி பிரித்தாள்வதும, சுயநல போக்கும் தான் என்றாகி விட்டது நமது நாடு மத சார்பற்ற நாடுதானா என்ற ஐயம் வாக்கு வங்கி அரசியலை பார்க்கும் போதும், உணரும் போதும் தோன்றவே செய்கிறதுநமது நாடு சென்று கொண்டிருக்கும் நிலையும் நாம் இருந்திருக்க வேண்டிய நிலையையும் நாம் கவனத்தோடு நினைத்து பார்க்க இதுவே சரியான தருணம்!” என்கிறார். போலி மதச்சார்பின்மையே இந்தப் பிரசினைக்கு மூல காரணம் என்பதை வெளிப்படையாக பேசிய அஜித்துக்கு நமது பாராட்டுக்கள்.


கார்கில் ஜெய் எழுதுகிறார்:

மாற்றுத்திறனாளிகளை, அவர்களின் மனதை முடமாக்கும் வார்த்தைகளான சப்பாணி,குருடர்,செவிடர் என்று மிகவும் முரட்டுத் தனமாக விளித்து வீதியெங்கும் போஸ்டர் ஒட்டுவார்கள் கிறிஸ்தவர்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு வியாதிகளினின்று விடுதலை அளிப்பதாகவும், அவர்களின் வியாதிகளுக்குக் காரணம் சைத்தான்களான ஹிந்துக் கடவுள்களே என்றும்  கிருஸ்துவ பாதிரிமார்கள் சுவிசேஷக் கூட்டங்களில் தெரிவிப்பார்கள். நம் எல்லாருக்கும் தெரிந்த இந்த கிருத்துவ மோசடியைக் கூட ஹிந்து சாமியாரே செய்வதாக படம் எடுத்தவர்தான் இந்தக் கமலஹாசன். ஹிந்துக்களை கிண்டல் செய்யவும், மதமாற்றத்திற்கு துணைபோகவும் கிருத்துவ டிவி சேனல்கள் இந்தக் காட்சியை மட்டும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பின. யூட்யூபில் ‘kadhalaa kadhaala comedy’ என்று தேடினால் முதலாவதாக இந்த ஹிந்து சாமியாரைக் கிண்டல் செய்யும் இந்தக் காட்சியே வரும். கிறிஸ்தவர்களால் ஹிந்துக்களுக்கு எதிராகச் செய்யப்படும் ஒரு அயோக்கியத்தனத்தை, பாதிக்கப்பட்டவர்களான ஹிந்துக்களே செய்வதாக மாற்றிக் காண்பிக்க மனதளவில் எவ்வளவு குரூர இயல்பு இருக்க வேண்டும்? இந்த குரூர புத்திக்குச் சொந்தக் காரர்தான் கமல்.



கி.பி. ஏழாம் நூற்றாண்டில் நடந்த வரலாறு என்ன? சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப் பட்டு வேதநெறிக்கு, சைவ சமயத்திற்குத் திரும்பிய திருநாவுக்கரசர் பெருமானைக் கொன்றிட சமணர்கள் முயன்றனர். மகேந்த்ரவர்ம பல்லவன் அவருக்கு மரண தண்டனை விதித்தான். யானை அவரை இடறிக் கொல்ல மறுக்க, தூக்கி எறிந்த சுண்ணாம்புக் காளவாயும் நாதன் உறையும் இமயம்போல் தணிய, பல்லவ மன்னன் குழம்பிப் போனான். திருநாவுக்கரசரைக் கடலில் அமிழ்த்திக் கொல்ல முடிவுசெய்தான். ஒருவேளை நீரும் அவருக்கு அடிபணிந்தால்? எஞ்ஞான்றும் உயிர் பிழைக்கக் கூடாதென கல்தூணில் கட்டி கடலில் வீசினான். கடவுள் உள்ளிருக்கையில் கல்லென்ன செய்யும்? கடல்தானென்ன செய்யும்? கல்தூணே நீரில் மிந்ததுவந்து அப்பரைக் கரையில் சேர்த்தது.



இதை அப்படியே நேர்மாறாக மாற்றி, பாதகம் செய்தவர்களை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவர்களான சைவர்களும் சோழமன்னன் வேத நெறியின் மற்றொரு பிரிவாகிய வைணவப் பிரிவைச் சேர்ந்த பக்தர் ஒருவரைத் தூணில் கட்டி கடலில் அமிழ்த்திக் கொலை செய்ய முயற்சி செய்தார்கள் என்று தசாவதாரம் படத்தில் காட்டியவர்தான் இந்தக் கமலஹாசன். சைவர்களுக்கு எதிராக நடந்த கொடுமையை சைவர்களே வேத மதமாகிய வைணவத்திற்கு எதிராகச் செய்வதாகக் காட்ட எவ்வளவு குரூர இயல்பு இருக்க வேண்டும்? இந்த குரூர புத்திக்குச் சொந்தக்காரர்தான் கமல். அதுவும் படத்தை தொடங்கும் முன்அடித்துக் கொள்வதற்கு பிற மதத்தினர் இல்லாததால், சைவர்களும் வைணவர்களும் ஒருவரை ஒருவர் கொன்று கொண்டிருந்த காலம்என்று கமலஹாசனின் மிரட்டும் குரலில் அறிவிப்பும் வரும். அதாவது பிறரைக் கொல்லுதல் வரலாற்றுக் காலங்களில் இருந்தே சைவர்களின் இயல்பாம்! இப்போது இருப்பது போல் அந்தக் காலத்தில் சண்டை போடுவதற்கு ஏதுவாக முஸ்லீம்களோ அல்லது கிருத்தவர்களோ இல்லையாம். அதனால் வைணவர்களை சைவர்கள் கொன்றார்களாம். எவ்வளவு பகிரங்கமான, அழுத்தந்திருத்தமான பொய்!





கடவுளின் பெயரால் கொலை செய்வது ஹிந்து மதத்தில் மட்டும்தான் இல்லை. பிற எல்லா மதங்களிலும் இருக்கிறது. இயேசுவின் படை என்று கிருத்துவர்களும், அல்லாவின் படையாக ஜிகாதிகளும் கடவுளின் பெயர் சொல்லி கொலை செய்யக் கூடியவர்கள். அனால் அப்படியே தலை கீழாக அன்பே சிவம் படத்தில் கிறிஸ்தவர்கள் ஹீரோவைக் காப்பாற்றுவார்கள். ஹிந்து வில்லனோதென்னாடுடைய சிவனே போற்றிஎன்று சொல்லி கொலை செய்ய ஆள் அனுப்புவான், என்று படம் எடுத்திருந்தார் கமலஹாசன். இது எவ்வளவு குரூரமான கற்பனை

கமலின் குரூர புத்தி மட்டுமே அவர் இவ்வாறெல்லாம் செய்வதற்குக் காரணம் இல்லை. அவரின் போலியான மனக்குரலும், பொய்யான உணர்ச்சி வசப்படுதல் எல்லாவற்றக்கும் காரணம் அவரின் அகந்தை. அகந்தையும், போலித்தனமும் உண்மையை மறைப்பதால் கமலஹாசன் கொடுத்த எல்லா பேட்டிகளிலும் அவரின் உளறல் அதிகமாகவே இருக்கும்.

விருமாண்டி படம் எடுக்கும் பொது பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அளித்த பேட்டியில் கமலஹாசன் தமிழர் பண்பாட்டைப் பற்றி இழிவாகப் பேசினார்: ஐந்து வருடத்துக்கு ஒருமுறை மாறும் பண்பாடு தமிழ்ப் பண்பாடு, ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு தமிழ்ப் பெண்டிர் மார்பை மூடும் ஜாக்கெட் அணிந்ததில்லை, ‘சும்மாதான் இருந்தார்கள், இப்போது அதுதான் தமிழ்ப் பண்பாடு என்று மூடிக் கொள்கிறார்கள் என்றார்.



வம்புடைக் கண்ணுருத் தெழுதரு முலை” (மூடியிருக்கும் துணியை மீறி மேல் எழும் மார்பகம்) என்கிறது அகநானூறு.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவரும் மார்பை பெண்கள் மறைக்கும் மரபை எழுதியுள்ளார்:


கடாஅக் களிற்றின்மேற் கண்படாம் மாதர்படாஅ முலைமேல் துகில்” – குறள், 1087.

ஆனால் கமலகாசனுக்கு மட்டும் நம் தாய்மார்கள் எல்லாரும் அரை நிர்வாணமாக அலைந்ததாகவே தெரிந்திருக்கிறது.



கேட்ட கேள்விக்கு சம்பந்தமில்லாமல் பேசியது அவ்வளவும். தமிழ்ப் பண்பாட்டைப் பற்றிய மிக எளிய புரிதல் கொண்டவனுக்குக் கூட பிள்ளையார் வழிபாடு குறைந்தது 1500 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு இருந்து வந்துள்ளது தெரியுமே. ஔவையார் பாடல் உட்பட எத்தனை இலக்கியங்கள் விநாயகரைப் போற்றுகின்றன? பிள்ளையார்பட்டி, காஞ்சி கைலாச நாதர் கோயில் முதல் தஞ்சைப் பெரிய கோயில் வரை எத்தனை கோயில்களில் புராதனமான விநாயக சிற்பங்கள் உள்ளன? இருந்தும் இவ்வளவு குரூரமாக பிள்ளையார் சதுர்த்தி இல்லை என்று பேச, எவ்வளவுதான்என்ற அறிவை மறைக்கும் அகந்தை வேண்டும்? …………

நன்றி: தமிழ் ஹிந்து


2 comments:

  1. இதே பொருள் தொடர்பாக ஓசை வலைப்பூவில் ஒரு அருமையானக் கட்டுரையைக் கண்டேன். அதுவும் உங்கள் பார்வைக்கு பகுத்தறிவின் மதவாதம்-விஸ்வரூபம் (சிறுகதை)

    ReplyDelete
  2. வாசித்தேன். சுட்டி தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete

நான் என் கருத்துகளைப் பதியவே (என் குரலைப் பதிவு செய்யவே) வலைப்பூப்பதிவுகளை இடுகிறேன்.

கண்ணியக்குறைவான மறுமொழிகளை வெளியிட இயலாது.

சில மறுமொழிகளுக்கு நான் பதிலளிக்கவில்லை என்றால், ஒன்று எனக்கு பதில் தெரியவில்லை அல்லது போராடிப் பயனில்லை (இந்தப் பழம் புளிக்கும்) என்ற எனது நிலையே.