Sunday, 10 February 2013

விஸ்வரூபம் - புடிச்சிருக்கு! ஆனா புடிக்கல!


நிருபமா (பூஜா குமார்) கணவனைப் பற்றி மருத்துவரிடம் விளக்கும்போது “நான் கெட்டவ இல்ல டாக்டர்” “அவர் மேலயும் தப்பில்லன்னா எனக்கு ரொம்ப கில்டியா இருக்கும்” “இதோ பாருங்க அப்படியே பியூச்சர்ல எனக்கு தீபக் கூட செக்ஸ் குறிச்சு ஒரு ஐடியா இருந்தா என்ன தப்புங்கிறேள். அமெரிக்காவுல மழை பெய்யாது அவ்வுளவுதானே. போய்ட்டுபோறது.” என்று ஒரு இயல்பான அமெரிக்கப் பெண்ணையும், அதேவேளையில் கமல் விரும்பும் முற்போக்கான இந்தியப் பெண்ணையும் பிரதிபலிக்கிறார்.

தனது கணவனின் அலித்தன்மையை விளக்க “அவர் எப்படிப்பட்டவர்"னு நினைக்கும்போது, பின்னணியில் கமலின் தக தக திக தின தின தின என்ற கமலின் குரலுக்கேற்ப முகபாவனைகளைக் காட்டுவதில் அசத்தியிருக்கிறார் பூஜா குமார்.

Thursday, 7 February 2013

கடல் - ஆர்ப்பரிக்குமா?

kadal-0601 நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைப் படம் முழுவதும் கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

விமர்சகர்கள் பெரும்பாலும் படம் சரியில்லை என்றே விமர்சனம் செய்திருந்தார்கள். இருந்தாலும் பார்ப்போம், ஜெயமோகன் எழுதியிருக்கிறாரே  என்று படத்தைப் பார்த்தேன். ஒரு பதிவு இதுகுறித்து எழுத வேண்டும் என்று தோன்றியது.

கௌதம் கார்த்திக்குக்கும், துளசி நாயருக்கும் அறிமுகப் படம் இது. இரு பெரும் நட்சத்திரங்களின் வாரிசுகள் ஒரு பெரிய இயக்குனரின் படத்தில் அறிமுகமாகியுள்ளனர்.

கிறிஸ்தவ வேத கல்லூரியில் படிக்கும் பெர்க்மென்ஸ் (அர்ஜூன்) மிகவும் கெட்டிக்காரர். ஒரு பாதிரியார் இவரைப் பார்த்து "ஏலே, பெர்க்மென்சு, என்னைவிட, உனக்குத்தாம்லே பைபிள் அதிகம் தெரியும்." என்று சொல்லுமளவுக்குக் கெட்டிக்காரார்.

Tuesday, 29 January 2013

விஸ்வரூபம் - கமல் - இஸ்லாம்


இதுவரை கமல் செய்யும் புரட்சிகளை நாம் விமர்சன எண்ணத்துடனேயே பார்த்திருக்கிறோம் (டிடிஎச் உட்பட). இதே வலைப்பூவில் இரண்டு மூன்று பதிவுகள் கூட அவரை விமர்சித்தே இருக்கும். ஆனால் இப்போது அவருக்கு நேரும் கொடுமையைப் பார்த்தால் மனம் இளகத்தான் செய்கிறது.

அவரை இஸ்லாமியார்கள் நண்பராகவே நாம் இதுவரைக் கண்டிருக்கிறோம். மருதநாயகம் டிரெய்லரைப் பார்த்தால் எந்த ஒரு இஸ்லாமியாரும் அவரை ஆரக்கட்டித் தழுவிக் கொள்வார்கள். அந்த டிரெய்லர் வந்த போது, என்னைப் போன்றோர் அச்சத்துடனேயே பார்த்தோம். அவர் மேல் அப்போதும் சிலருக்கு விமர்சனம் இருந்தது. மர்மயோகியும் அதுபோலத்தான் என்றார்கள்.

Wednesday, 19 September 2012

கமலா? சிவாஜியா? சிறந்தவர் யார்?



வலைப்பூக்களை வரிசையாகப் பார்த்துக் கொண்டு வரும்போது ஒரு பதிவரின் பதிவு சற்று யோசிக்க வைத்தது. அந்தப்பதிவிற்கான மறுமொழியை அந்த வலைப்பூவிலும் கொடுத்திருக்கிறேன். அந்த மறுமொழியையே இங்கு பதிவாகவும் கொடுக்கிறேன். நான் மறுமொழி கொடுத்திருக்கும் அந்தப் பதிவின் முகவரி இதோ...

அடுத்த கமல் யார்?


இனி என் மறுமொழி

Friday, 14 September 2012

முகமூடி | சூப்பர் ஹீரோதான்



எனது முந்தைய பதிவுகளில் ஒன்றான நெஞ்சம் மறப்பதில்லை பதிவில் தேவையில்லாமல் மிஷ்கினைக் குறைத்து சொல்லிவிட்டோமோ என்று முகமூடி படம் பார்த்த பிறகு தோன்றுகிறது. அந்தப் பதிவை எழுதும்போது நான் முகமூடி படம் பார்க்கவில்லையே தவிர படத்தைப் பற்றிய வலைப்பூ பதிவர்களின் விமர்சனங்களைப் படித்திருந்தேன். ஆகா.. படம் அவுட்டா, அதுக்கா இந்த சீன் போட்டாரு மிஷ்கின் என்று நினைத்தேன். அதனால்தான் ஸ்ரீதரைப் பெருமைப்படுத்துவதாக நினைத்து மிஷ்கினை மட்டம் தட்டியிருந்தேன். இதுவரை மிஷ்கின் இயக்கிய படங்களில் யுத்தம் செய், நந்தலாலாவைத் தவிர மற்ற படங்கள் எனக்குப் பிடிக்காது அதனால் பழைய குருடி கதவை திறடி கதையாகிவிட்டதோ என்று எண்ணி அப்படி பதிவிட்டிருந்தேன்.

இன்றுதான் முகமூடி படம் பார்க்க முடிந்தது. படம் பார்த்த பிறகு விமர்சனங்கள் எல்லாம் மிஷ்கினை காழ்ப்புணர்ச்சியுடன் அணுகுவதாகவே எனக்குப் படுகிறது. அவர் காப்பி அடித்தாரோ என்ன செய்தாரோ, ஆனால்... நன்றாக இயக்கியிருக்கிறார். குறிப்பாக அவர் எடுத்திருக்கும் கேமரா கோணங்கள் சூப்பர்.

ஜீவாவை அதிகம் வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் என்பதை ஜீவாவின் தோற்றமே நமக்குச் சொல்கிறது. உடலைத் திறந்து காட்டாமலேயே முறுக்கேறியிருக்கிறார் ஜீவா என்பது நன்றாகத் தெரிகிறது.

Thursday, 13 September 2012

கமல்ஹாசன் கவிதை | விமர்சனம்



முகநூலில் எனது நண்பர் ஒருவர் இந்தக் கவிதையை ஷேர் செய்திருந்தார். அவர் கமலின் தீவிர விசிறி. நானும் கூடத்தான். இருந்தாலும் தீவிரமெல்லாம் கிடையாது. நல்ல படம் என்றால் ரசிப்பேன். என்னை (என் நம்பிக்கையை) அடிக்கிறார் என்றாலும் நல்ல படமாக இருந்தால் ரசிப்பேன். நல்ல படமும் தராமல், சமுதாயத்தை சீரழிக்கும் ஒரு கதையைச் சொல்லி இதை ரசி என்றால் ரசிக்க மாட்டேன். விமர்சிப்பேன். 

எனது நண்பர் ஷேர் செய்திருந்த அந்தக் கவிதையைப் படித்தவுடன் விமர்சிக்கத் தோன்றியது. அதற்குத்தான் இந்த பதிவு. இனி கமல்ஹாசனின் கவிதையைப் பார்ப்போம்.

Sunday, 2 September 2012

அகோரா | ஸ்பானிய திரைப்படம்



தமிழ் ஹிந்து வலைத்தளத்தில் திரு.அரவிந்தன் நீலகண்டனின் அகோரா திரைப்பட விமர்சனம் படித்தேன். படம் பார்க்கும் ஆவலைத் தூண்டியது அந்த விமர்சனம்.

வலைத்தளங்களைத் தேடி அந்தப் படத்தை தரவிறக்கம் செய்து பார்த்தேன். அது ஒரு ஸ்பானிய மொழி திரைப்படம். நான் பார்த்தது ஆங்கிலத்தில்...

தற்போது எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியா கி.பி.391ல் ரோமானியப் பேரரசின் ஒரு அங்கமாக இருந்தது. தலைவர்களை உருவாக்கும் ஒரு பெரிய கிரேக்க பள்ளியின் ஆசிரியையாகப் பணி செய்கிறாள் பெண் தத்துவஞானி ஹிபாசியா. டாலமிய புவிமையக் கோட்பாட்டை அதிக அக்கறையோடு மறுத்து பயிற்றுவித்து வந்தாள்.

நான் ஈ



பிந்து (சமந்தா) என்ற மைக்ரோ ஆர்டிஸ்ட் வீட்டிற்கு எதிரில் நானி (நானி) என்ற இளைஞன் வசிக்கிறான். பிந்து ஒரு மைக்ரோ ஆர்ட் பிராஜெட் செய்து கொண்டிருக்கிறாள். நானி பிந்துவைக் காதலிக்கிறான். பிந்து அவனைக் காதலித்தாலும் காட்டிக் கொள்ளாமல் அவனை அலைய விடுகிறாள்.

சுதீப் (சுதீப்) பெண்பித்தம் பிடித்த ஒரு பெரிய கோடீஸ்வர தொழிலதிபர். பணத்திற்காக மனைவியையே கொலை செய்யும் அளவிற்கு கொடுமைக்காரர். ஒரு நாள் பிந்து சுதீப்பின் அலுவலகத்திற்கு நன்கொடை வாங்குவதற்காகச் செல்கிறாள்.