Saturday, 11 May 2013

ஷெர்லாக் ஹோம்ஸ் - A Study in Pink



ஷெர்லாக் ஹோம்ஸ் நாவல்கள் படித்திருக்கிறீர்களா? அந்த நாவல்களைப் படிக்கும்போது ஏற்படும் அதே பரபரப்பு, BBC தயாரித்து, BBC One மற்றும் BBC HDல் வெளியான "எ ஸ்டடி இன் பிங்க்" (A Study in Pink) ஷெர்லாக் ஹோம்ஸ் -ஐ பார்க்கும் போதும் ஏற்படுகிறது.

இது பிபிசி தயாரிக்கும் "ஷெர்லாக்" என்ற தொடர் நாடகத்தின் முதல் பகுதியாகும். இந்த எபிசோடை ஸ்டீபன் மொபாட் என்பவர் எழுதியிருக்கிறார். பவுல் மெக்கியுகன் என்பவர் இயக்கியிருக்கிறார்.

இந்த நாடகம்வ சர் ஆர்தர் கோனன் டாயல் (Sir Arthur Conan Doyle)  எழுதிய "எ ஸ்டடி இன் ஸ்கார்லெட்" (A Study in Scarlet)  என்ற நாவலைத் தழுவி, தற்காலச் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டது.

இனி கதை…

ஷெர்லாக் ஹோம்ஸ் (பெனடிக்ட் கம்பர்பேட்ச்) ஒரு அதிமேதாவி துப்பறியும் நிபுணர். ஒருவரைப் பார்க்கும்பொழுதே, அவரது வரலாற்றையே படிக்கும் திறன் கொண்டவர்.

Sunday, 10 February 2013

விஸ்வரூபம் - புடிச்சிருக்கு! ஆனா புடிக்கல!


நிருபமா (பூஜா குமார்) கணவனைப் பற்றி மருத்துவரிடம் விளக்கும்போது “நான் கெட்டவ இல்ல டாக்டர்” “அவர் மேலயும் தப்பில்லன்னா எனக்கு ரொம்ப கில்டியா இருக்கும்” “இதோ பாருங்க அப்படியே பியூச்சர்ல எனக்கு தீபக் கூட செக்ஸ் குறிச்சு ஒரு ஐடியா இருந்தா என்ன தப்புங்கிறேள். அமெரிக்காவுல மழை பெய்யாது அவ்வுளவுதானே. போய்ட்டுபோறது.” என்று ஒரு இயல்பான அமெரிக்கப் பெண்ணையும், அதேவேளையில் கமல் விரும்பும் முற்போக்கான இந்தியப் பெண்ணையும் பிரதிபலிக்கிறார்.

தனது கணவனின் அலித்தன்மையை விளக்க “அவர் எப்படிப்பட்டவர்"னு நினைக்கும்போது, பின்னணியில் கமலின் தக தக திக தின தின தின என்ற கமலின் குரலுக்கேற்ப முகபாவனைகளைக் காட்டுவதில் அசத்தியிருக்கிறார் பூஜா குமார்.

Thursday, 7 February 2013

கடல் - ஆர்ப்பரிக்குமா?

kadal-0601 நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைப் படம் முழுவதும் கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

விமர்சகர்கள் பெரும்பாலும் படம் சரியில்லை என்றே விமர்சனம் செய்திருந்தார்கள். இருந்தாலும் பார்ப்போம், ஜெயமோகன் எழுதியிருக்கிறாரே  என்று படத்தைப் பார்த்தேன். ஒரு பதிவு இதுகுறித்து எழுத வேண்டும் என்று தோன்றியது.

கௌதம் கார்த்திக்குக்கும், துளசி நாயருக்கும் அறிமுகப் படம் இது. இரு பெரும் நட்சத்திரங்களின் வாரிசுகள் ஒரு பெரிய இயக்குனரின் படத்தில் அறிமுகமாகியுள்ளனர்.

கிறிஸ்தவ வேத கல்லூரியில் படிக்கும் பெர்க்மென்ஸ் (அர்ஜூன்) மிகவும் கெட்டிக்காரர். ஒரு பாதிரியார் இவரைப் பார்த்து "ஏலே, பெர்க்மென்சு, என்னைவிட, உனக்குத்தாம்லே பைபிள் அதிகம் தெரியும்." என்று சொல்லுமளவுக்குக் கெட்டிக்காரார்.

Friday, 18 January 2013

OMG: Oh My God



சமீபத்தில் இந்தித் திரைப்படம் OMG: Oh My God பார்க்க நேர்ந்தது. படம் சிந்திக்கத்தூண்டும் வகையில் இருந்ததால் ஒரு பதிவு எழுத நினைத்து ஆரம்பிக்கிறேன்.

காஞ்சிலால் மேத்தா (பரேஷ் ராவல்) ஒரு நடுத்தர வர்க்க இந்து நாத்திகவாதி. வீட்டிலும் சரி வெளியிலும் சரி அவர் நாத்திகம் பேசியே அனைவரையும் கிண்டலடிப்பார். வீட்டில் மனைவி மிகுந்த பக்திமான். கணவர் செய்யும் செயல்களை அவர் பரிதவிப்புடனேயே பார்க்கிறார்.

Monday, 7 January 2013

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்



யதார்த்தமான வசனங்கள். யதார்த்தமான நடிப்பு, வசனங்களைக் குறைத்து முகபாவனைகளில் உணர்ச்சியை வெளிக்கொணர்வது என்பன போன்ற அம்சங்களால் இந்தப் படம் துண்டாக மற்ற படங்களிலிருந்து தனியாகத் தெரிகிறது.

Friday, 14 September 2012

முகமூடி | சூப்பர் ஹீரோதான்



எனது முந்தைய பதிவுகளில் ஒன்றான நெஞ்சம் மறப்பதில்லை பதிவில் தேவையில்லாமல் மிஷ்கினைக் குறைத்து சொல்லிவிட்டோமோ என்று முகமூடி படம் பார்த்த பிறகு தோன்றுகிறது. அந்தப் பதிவை எழுதும்போது நான் முகமூடி படம் பார்க்கவில்லையே தவிர படத்தைப் பற்றிய வலைப்பூ பதிவர்களின் விமர்சனங்களைப் படித்திருந்தேன். ஆகா.. படம் அவுட்டா, அதுக்கா இந்த சீன் போட்டாரு மிஷ்கின் என்று நினைத்தேன். அதனால்தான் ஸ்ரீதரைப் பெருமைப்படுத்துவதாக நினைத்து மிஷ்கினை மட்டம் தட்டியிருந்தேன். இதுவரை மிஷ்கின் இயக்கிய படங்களில் யுத்தம் செய், நந்தலாலாவைத் தவிர மற்ற படங்கள் எனக்குப் பிடிக்காது அதனால் பழைய குருடி கதவை திறடி கதையாகிவிட்டதோ என்று எண்ணி அப்படி பதிவிட்டிருந்தேன்.

இன்றுதான் முகமூடி படம் பார்க்க முடிந்தது. படம் பார்த்த பிறகு விமர்சனங்கள் எல்லாம் மிஷ்கினை காழ்ப்புணர்ச்சியுடன் அணுகுவதாகவே எனக்குப் படுகிறது. அவர் காப்பி அடித்தாரோ என்ன செய்தாரோ, ஆனால்... நன்றாக இயக்கியிருக்கிறார். குறிப்பாக அவர் எடுத்திருக்கும் கேமரா கோணங்கள் சூப்பர்.

ஜீவாவை அதிகம் வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் என்பதை ஜீவாவின் தோற்றமே நமக்குச் சொல்கிறது. உடலைத் திறந்து காட்டாமலேயே முறுக்கேறியிருக்கிறார் ஜீவா என்பது நன்றாகத் தெரிகிறது.